Saturday, October 23, 2010

மீட்சி காலம்



















நிர்பந்திக்கப்பட்ட
நெடுந்தூர வாழ்வில்
எதைக்கொண்டு மீட்பது
பழைய நிகழ்வுகளை?

வாகனங்களுக்கிடையில்
சிக்கித்தவிக்கிறது
எந்திர வாழ்வு.
சற்றைக்கொருதரம்
வடிவம் மாறும் மேகங்களை கவனித்து
மாதங்களாகிறது.
பூக்களை பெண்களின் தலைகளில்
பார்ப்பததோடு சரி.
கடைசியாக பறவைகளை பார்த்தது
எப்போதென்று நினைவேயில்லை.
மாழைபெய்யும் அதிசயநாட்களில் கூட
அன்றைய இழ்புகளைத்தான்
கணக்குப்போடுகிறது பாழாய்ப்போன
நகர வாழ்வு.

எதிர்ப்படும் எந்தஒரு முகமும்
அன்பாக இருப்பதாக தெரியவில்லை.
பெண்கள்கூட இறுக்கமாகத்தான்
இருக்கிறார்கள்.

பறந்துகெண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.
எல்லோருக்கும் எல்லோரையும்
கடந்துபோகக்கூடிய அளவுக்கு
வேலைகள் இருந்துகொண்டே இருக்கின்றன.
நால்ரோட்டில் சிக்னலுக்காக நிற்கும்
சற்றை நேரத்திற்குகூட
அவசரமாக மணிக்கட்டை பார்த்து பார்த்து
அலுத்துக்கொள்கிறார்கள்.

இவர்களுக்கும் எனக்குமான
மீட்சி காலம்தான்
என்றைக்கு... எந்தவிதத்தில்?...

No comments:

Post a Comment