Thursday, October 21, 2010

பெயர் குறித்து...


    எல்லாவற்றையும் பாரதியிலிருந்தே தொடங்கும் நான் இந்த வலைப்பதிவின் தலைப்புக்கும் அவனையே நாடினேன். எதற்கும், எப்போதும் என்னை ஏமாற்றாத பாரதி ஒரு நல்ல தலைப்பையே எனக்கு கொடுத்திருப்பதாக நம்புகிறேன்.

            கானப் பறவை... எந்த கட்டுப்பாடும் இல்லாத பறவைகள் தன் விருப்பப்படி சுற்றி கத்தித்திரியும், அல்லது பாடும். எதுவும் யாரும் பெருட்டல்ல அவைகளுக்கு.என்ன ராகம், என்ன அளவுகோள், எங்கு பாடவேண்டும், என்ன பாடவேண்டும் என எது பற்றியும் அக்கறையோ, கவலையோ கிடையாது. தேவையும் இல்லை. தெரிந்த ஒன்றே ஒன்று சமயம் கிடைக்கும்போது பாடுவது. இது கானப் பறவைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
     அசோகமித்திரனின் எளிமையான அதேசமயத்தில் ஆழமான எழுத்தும், அனாவசியமாக வார்த்தைகளை பயன்படுத்தாத சுந்தர ராமசாமியின் எழுத்தும், நாஞ்சில் நாடனின் சமூகக் கரிசன எழுத்தும் தான் இலக்கியத்தின் பால் இன்னமும் நாட்டம் கொண்டிருக்கச் செய்கிறது என்னை. ஒரே ஒரு கதையோ, கட்டுரையோ அசோகமித்திரன் மாதிரி சுந்தர ராமசாமி மாதிரி எழுத முடிந்து விட்டாலே பெரும் விருப்பம் நிறைவேறிவிடும் போல தோன்றுகிறது...

No comments:

Post a Comment