Wednesday, November 24, 2010

ப(பி)டித்த நாவல்கள்

பசித்த மானிடம் -- கரிச்சான் குஞ்சு
ஒரு புளிய மரத்தின் கதை -- சுந்தர ராமசாமி
ஜே. ஜே. சில குறிப்புகள் -- சுந்தர ராமசாமி
அபிதா -- லா.ச. ராமாமிருதம்
தலைமுறைகள் -- நீல. பத்மநாபன்
18-வது அடசக்கோடு -- அசோகமித்திரன்
தண்ணீர் -- அசோகமித்திரன்
அம்மா வந்தாள் -- தி. ஜானகிராமன்
பொய்த்தேவு -- கா.ந.சுப்ரமணியன்
சாயாவனம் -- சா.கந்தசாமி
அவன் ஆனது -- சா.கந்தசாமி
கடல் புரத்தில் -- வண்ணநிலவன்
வெக்கை -- பூமணி
பிறகு -- பூமணி
என்பிலதனை வெயில் காயும் -- நாஞ்சில் நாடன்
மிதவை -- நாஞ்சில் நாடன்
நெடுங்குருதி -- எஸ். ராமகிருஷ்ணன்
ரத்த உறவு -- யூமா. வாசுகி
காகித மலர்கள் -- ஆதவன்
கோபல்ல கிராமம் -- கி். ராஜநாராயணன்
சிதறல்கள் -- பாவண்னன்
ஒரு கடலோர கிராமத்தின் கதை -- தோப்பில் முகமது மீரான்

Wednesday, November 17, 2010

நினைவுப் பயணம்...

நான் படம் "பிடித்தவைகளில்" சில...

























மதுவும் மது நிமித்தமும்



















இரு நபர்களுக்கிடையேயான
இறுக்கத்தின் இடைவெளியை
ஒரு குவாட்டர்
தீர்க்கும்.



போதையோ 
பேச்சு சுவாரஸ்யமோ
மூன்றாவது லார்ஜூக்கு
தண்ணீர் கலக்க 
எப்படியும்
மறந்தே போய்விடுகிறது.

நல்ல இசை
நல்ல மழை
நல்ல வெயில்
நல்ல புத்தகம்
நல்ல மனிதர்கள்
நல்ல சாப்பாடு 
என்பது போல
நல்ல போதையும்
உண்டுதானே

நல்ல விசேசங்களுக்கு
ஒரு சுவையும்
கெட்ட விசேசங்களுக்கு 
ஒரு சுவையும்
இருக்கத்தான் செய்கிறது
மதுவில்.

கோபம் கொப்பளிக்கும்
அதே அளவுக்கு
பீரின் நுரை மாதிரி
அன்பும் பொங்குமிடம்
மதுக்கடைகள்.

இன்று வரையில்
மதுவைத்தொடாத
மதுப்பழக்கம் இல்லாத அப்பா
தன் வாழ்க்கை கதையை சொன்ன
ஒரு நாள்
தனக்கு கிடைத்த போலீஸ் வேலையை
தூக்கியெறிந்து விட்டு வந்தேன் என்றார்.
ஏன் எனக்கேட்டதற்கு
"தினமும் குடிக்க கூப்டானுங்கடா"(!)

ஏற்கனவே
மதுவும் குளிர் பானமும் சரிசமமாக
கலந்திருந்த கண்ணாடி கோப்பையில்
மீதமிருந்த இடத்திற்கும்
"இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊத்துடா
குடலு என்னத்துக்காகும்"
என நண்பனிடம்
சொல்லிக்கொண்டிருந்த போது
பக்கத்து மேசையருகே 
வந்துநின்ற அடுத்த நிமிடம்
கையோடு வாங்கிவந்திருந்த 
குவாட்டரை திருகி
எதுவும் கலக்காமல்
ஒரே மடக்கில் குடித்து முடித்து
எங்களிடமே இரண்டு கடலையை
வாங்கி வாயில் பொட்டுக்கொண்டு போன 
அந்த பெரியவருக்கு வயது
எப்படியும் எணபத்தியாறு இருக்கும்.

நண்பர்களோடு ஒரு மாதிரியும்
தனியே அமர்ந்து
அருந்தும் போதும்
மனிதர்களுக்கு மட்டுமல்லாமல்
தனித்தனியே முகமுண்டு
மதுவுக்கும்.


வரும் புது வருடத்திலிருந்து...
இந்த பிறந்த நாளோடு...
விட்டுவிடவேண்டும்
என்ற சபதம்
ஒருபோதும் நிறைவேறாமல்
ஒவ்வொரு ஆண்டும்
ஒவ்வொரு பிறந்தநாளாக
தாவிக்கொண்டு இருக்கிறதே தவிர
விட முடிந்ததே இல்லை.
அது சரி
ஏன் விட வேண்டும்
குடியை?




மற்ற நேரங்கைளவிட
கூடுதலான அன்பும் அக்கறையும்
காட்டுவதற்காகவே
உங்களை மதுவருந்த அனுமதிக்கலாம்
போலிருக்கிறது என்று
வீட்டில் ஒரு முறை 
மதுவருந்தும் போது
முட்டைப்பொரியல் கொண்டு வந்து
வைத்துவிட்டு சொன்னாள்
என் மனைவி.

இது வரையிலான
வாழ்வின் சந்தோஷப்பொழுதுகளை
சராசரியாகக்கணக்கிட்டால்
விசேச நாட்களில்
நண்பர்களுடனான
மதுப்பகிர்தலின் பொழுதுகளாகத்தான்
இருக்கின்றன.



எல்லா
காலநிலைகளுக்கும்
எல்லா
மனநிலைகளுக்கும்
ஏற்ற ஒரு விஷயத்தை
சொல்ல முடியுமா உங்களால்
மதுவைத்தவிர.