Friday, September 23, 2016

பாரதி மற்றும் இசைஞானியின் துணையுடன் மட்டுமே இந்த வாழ்வுமுழுவதையும் கடந்து விடமுடியும் எனத்தோன்றுகிறது.

Monday, August 22, 2016



கரைசேரும் முகங்கள்

அண்ணனிடமிருந்து 
அலைபேசியில் அழைப்பு வரும்.
.... "நம்ம எதிர்வீட்டு சேகரோட சித்தப்பா
நெட்டப்பாக்கத்தில இருந்தார் தெரியுமாடா"?.... என்று
கேட்கும்போதே கறுக்கென்றிருக்கும்.
..."அவரு நேத்து வெடிகாலையில 
பால்வாங்க போகும்போது லாரிகாரன் அடிச்சு
அதே இடத்துல"...

இப்படியாக
இரண்டு வருடங்களுக்கு முன்பு
இதே மாதிரி அகால மரணமடைந்த 
சோரியங்குப்பத்து தாய் மாமன் முதல்
நான்கு நாட்களுக்கு முன்பாக
படுத்த படுக்கையாய் இருந்து இறந்த
எங்கள் தெருவின் முன்னாள் தர்மகத்தா 
தனபால் மேஸ்திரி...
எப்போதும் அமைதியே உருவாய்க்கொண்ட
உமாமதி சித்தப்பா...
அடுத்தவாரமே அவர் மனைவி....

ஊருக்கு போகும்சந்தர்ப்பங்களில்
"நான் செத்தா வந்து பாப்பியாம்மா" என்று
முகம் வருடி வேதனையுடன் கேட்ட 
மனைவியின் பாட்டி என
சொல்லிக்கொண்டே போகலாம்.

நீரில் விழுந்த பொருள் மெல்ல மெல்ல
கரைசேர்வது மாதிரி
சின்ன வயசிலிருந்து 
பார்த்து, பேசி, பழகி, உறவாடிவந்த
பல அற்புத மனிதர்களின் முகங்களை
கரைசேர்ந்த நேரத்தில்
இறுதியாகப்பார்க்கும் பாக்கியம் கூட
வாய்க்காத தொலைதூர வாழ்க்கை
வாய்த்து தொலைக்காமல்
போயிருந்தால்தான் என்ன?

(தனபால் மேஸ்திரிக்கு ....)

அப்பா....சில நினைவுகள்






கங்கைகொண்ட சோழபுரம்...15 ஆகஸ்ட் 2016











Thursday, February 02, 2012




















வருடங்களுக்கு பிறகு நேற்று வீதியில் கண்ட பூம் பூம் மாடு. வழியில் நிறுத்தி 10 ரூபாய் கொடுத்தேன். காலை மடக்கி வணக்கம் சொல்ல முயன்ற மாட்டை வேண்டாம் என தடுத்தேன்.

Monday, December 19, 2011



























பண்டிகைகள், திருவிழாக்கள், நாளும் கிழமையுமான விசேச நாட்கள்
குறித்தான மதிப்பும், அக்கறையும் இருக்கும் வரை வாழ்க்கை அர்த்தமுடனும்
உயிர்ப்புடனும் இருக்கும் எனத் தோன்றுகிறது.

(கடந்த கார்த்திகைத் தீப பண்டிகைக்காக தன் இரு மகள்களுடன்
ரோட்டோரக்கடையில் அகல் விளக்கை  ரோட்டில் உட்கார்ந்து வாங்கும் அந்த அக்கறையும் ஈடுபாட்டையும் கவனிப்பது முக்கியம்.)